Saturday, May 28, 2011
பழனியில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம்
இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் பகுதியாக கடந்த 21/5/2011 அன்று பழனியில் பெரியபள்ளி வாசலில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tuesday, May 24, 2011
போர் குற்றவாளி ராஜபக்சேவை சர்வதேச குற்றத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலைமையிலான அரசு அங்குள்ள அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்து வந்தது. அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை தனியாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. அதில் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கலாம் என்று அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் ஐ.நா சபை ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்தும் உலக நாடுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரையில் SDPI யின் சார்பாக மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் நூற்றுக்கணக்கான SDPI தொண்டர்களுடன், பல தமிழ் ஆர்வலர்களுடன் இணைந்து அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்தும், ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தெற்கு வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அமெரிக்கா விற்கு எதிராகவும் ராஜப்க்சே விற்கு எதிராகவும் பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டது .
Monday, May 23, 2011
இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைகாலில் கடந்த 22.5.11 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4.30 க்கு காரைகால் காமராஜர் சாலையில் உள்ள ஷமீரா மகாலில் இஸ்லாத்தை அறிவோம் நிகழ்ச்சி நடைபற்றது.
Subscribe to:
Posts (Atom)