Monday, July 5, 2010

RSS யிடம் இருந்து பாதுகாப்பு கேட்கும் மோகன் பகவத்

பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றமும், மாநில அரசும் போட்டி போட்டிக் கொண்டு பாதுகாப்பு அளிப்பதை கண்டுள்ளீர்களா? ஆம்! ஆர்.எஸ்.எஸ்ஸை தலைமையாக கொண்டு பல ஹிந்துத்துவ தீவிரவாதிகள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றதை நாம் அறிவோம். மலேகோன், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மார்கோவா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் என பல குண்டுவெடிப்புகள் இவ்வமைப்புகளால் நிகழ்த்தப்பட்டு,நீதிவிசாரனைகளில் இவ்வமைப்புகளின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும், எங்கு நம் வேடம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், கைது செய்யப்பட்ட அத்தொண்டர்களை கழட்டிவிடும் முயற்சியில் அவ்வமைப்புகள் களமிறங்கின. அதன்படி, இக்குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கும் தங்கள் இயக்கங்களுக்கும் சம்மந்தமே கிடையாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை என்றும் அவ்வமைப்புகள் கைகழுவின. நம் தீவிரவாத இயக்கங்களை தடைசெய்துவிடுவார்கள் என்று பயந்து, அத்தொண்டர்களுக்கு எந்த விதமான ஆதரவோ அல்லது உதவியோ நாங்கள் அளிக்கமாட்டோம் என்றும் இவ்வமைப்புகள் சூளுரைத்தனர்.

இச்செய்தியை அறிந்த தொண்டர் பயங்கரவாதிகள் கொதிப்படைந்தனர். தங்கள் வாழ்கையை சீரழித்த தலைவர்களை கொலைச் செய்யப்போவதாகவும் தொண்டர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.தம் சக பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதைக் கண்டு பயந்து போன பயங்கரவாத தலைவன், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகினான்.

மனுவை விசாரித்த நீதிமன்றமோ, மாநில அரசை இது தொடர்பாக கேள்வி கேட்க, நீதிமன்றமும், மும்பை மாநில அரசும் அப்பயங்கரவாதத் தலைவனுக்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். சிறையில் இருக்கும் தன் சக பயங்கரவாதிகளினால் பயங்கரவாத தலைவனுக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஒட்டுமொத்த பயங்கரவாத கும்பல்களின் மூலம் நம் சமுதாயத்திற்கு ஏற்படும்நிலை?

பயங்கரவாதிகள் மனுதாக்கல் செய்தால் ஓரிரு நாட்களில் விசாரித்து தீர்வுகாணும் நீதிமன்றமும், மாநில மத்திய அரசுகளும், சாதாரண மக்களின் குறைகளைத் தீர்க்க காலம் தாழ்த்துவது ஏனோ? ஊழல் கறை படிந்த அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு அழிக்கும் வழக்கம் மாறி, இன்று பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவது! நம் இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு இது தான் காரணமோ என்னவோ? கடைசி வரை அந்த தீவிரவாதியின் பெயரையே சொல்லவே இல்லையே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. ஆம்! தனக்கு தன் தொண்டர் சகாக்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டது ஆர்.எஸ்.எஸ் தலைவர் 'மோகன் பகவத்' தான்.

No comments:

Post a Comment