Sunday, May 2, 2010

ஹெட்லி அமெரிக்க உளவாளிதான்: ஹெட்லியின் தாய்மாமன் பேட்டி

http://www.ndtv.com/news/world/headleys-uncle-to-ndtv-hes-part-armani-part-gilani-22117.php புதுடெல்லி:மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக குற்றஞ்சுமத்தப்படும் டேவிட் கோல்மென் ஹெட்லி அமெரிக்க உளவாளியாக செயல்பட்டவர் என அவருடைய தாய்மாமன் வில்லியம் ஹெட்லி என்.டி.விக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக ஹெட்லி ஒருபோதும் செயல்படவில்லை என வில்லியம் கூறுகிறார். அமெரிக்காவுக்காக உளவு அறிந்தாரா என்ற கேள்விக்கு வில்லியம் பதிலளிக்கையில், முன்பு ஹெட்லி அமெரிக்காவுக்காகத்தான் செயல்பட்டார் எனக்கூறினார். போதை மருந்து வழக்கில் கைதாகி சாதாரண சிறைத் தண்டனையை பெற்றபிறகு ஹெட்லி அமெரிக்காவுக்காக வேண்டி உளவு வேலைப்பார்ப்பதை நிறுத்தியதாக வில்லியம் தெரிவித்தார். உளவு வேலைகளை குறித்து ஹெட்லி விவாதிப்பார். ஆனால் எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறாவிட்டாலும், விமர்சனம் செய்வதுண்டு என்றும் வில்லியம் கூறுகிறார். கடந்த ஆண்டுதான் ஹெட்லியை அமெரிக்க புலனாய்வு ஏஜன்சியான எஃப்.பி.ஐ கைதுச் செய்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக விசாரணையின்போது தெரிவித்த ஹெட்லியை விசாரணைச் செய்ய இந்திய அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டது. அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் உள்ளிட்ட அமெரிக்க உயர் அதிகாரிகள் இதுத்தொடர்பாக வாக்குறுதியளித்த போதிலும், இந்திய அதிகாரிகள் ஹெட்லியை விசாரணைச் செய்வது தொடர்பாக இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஹெட்லி அமெரிக்க உளவாளியாக இருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பிறகும் அதற்கு உறுதிச் செய்யப்படாமல் இருந்தது. இந்த குற்றச்சாட்டு இந்திய பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோவைச் சார்ந்தவர்தான் ஹெட்லியின் தாயார். பாகிஸ்தானைச் சார்ந்தவரை திருமணம் செய்த அவர் பின்னர் அவரை விவாகரத்துச் செய்துவிட்டு அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்றார். தன்னுடன் தனது மகன் ஹெட்லியையும் அழைத்துச் சென்றார். அமெரிக்காவிற்கு செல்லும் வரை ஹெட்லி வளர்ந்தது பாகிஸ்தானில். குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஹெட்லியை முழுவதும் தளர்வடையச் செய்தது. அமெரிக்காகாரனாக இருக்கும்பொழுதே ஹெட்லி பாகிஸ்தானியாகவும் இருந்தார். அமெரிக்கர்கள் ஹெட்லியை பாகிஸ்தான் முஸ்லிமாக கருதினார்கள். பாகிஸ்தானிகளோ ஹெட்லியை அமெரிக்கக்காரனாக கருதினார்கள். இத்தகையதொரு எதிரெதிர் துருவங்களில் ஹெட்லியின் வாழ்க்கை அமைந்தது. இரண்டு உலகங்களில் ஹெட்லி ஒரே சமயத்தில் வாழ்க்கை நடத்தினார். இது அவரது இரட்டை குணத்திற்கு காரணமானது. அவரது தாயாருக்கும் பிரச்சனைகளிருந்தது. ஆனால் அவரிடம் அமெரிக்க கலாச்சாரம் ஆழமாக பதிந்திருந்தது. சொந்த விருப்பப்படி வாழும் பெண்மணியாக இருந்தார் அவர். மகனுக்கு 16 வயதாகும்பொழுது அவர் தனக்கு விருப்பமான ஆணைத் தேடத் துவங்கினார். இது ஹெட்லியின் வாழ்க்கையை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றியது. மதுபானக் கடைகளில் அவரது வாழ்க்கை கழிந்தது. அங்கு சில முஸ்லிம்களையும் அவர் கண்டார். தனிப்பட்ட வாழ்க்கையின் குழப்பங்கள் ஹெட்லியை இரட்டைக்குணம் கொண்டவராக மாற்றியது. அவர் ஒரே நேரத்தில் பாகிஸ்தானியாகவும், அமெரிக்கக்காரனாகவும் வாழ்ந்தார். மேற்கத்திய கலாச்சாரங்களுடன் டேவிட் ஹெட்லியாக வாழ்ந்தார். மீசையும், தாடியும் மழித்திருந்த ஹெட்லியின் கைகளில் எப்பொழுதும் மதுபான புட்டிகள் இருந்தன. தாவூத் கீலானி என்ற பெயரில் ஹெட்லி முஸ்லிமானார். நீண்ட தாடியுடனான முஸ்லிம் வேடத்துடன் நடந்த ஹெட்லியின் கைகளில் குர்ஆன் இருந்தது. ஆனால் அவர் ஒரு பப்பில்(Pub) (அதாவது ஆல்கஹால் விற்பனைச் செய்யும் வியாபார ஸ்தலம்) மானேஜராக வேலைப் பார்த்தார். இவ்வாறு பேட்டியளித்த ஹெட்லியின் தாய்மாமன் வில்லியம் தற்பொழுதும் தான் கடும் பாதுகாப்பிலிருக்கும் ஹெட்லியிடம் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். விசாரணையைக் குறித்து ஹெட்லி ஏதாவது தெரிவிப்பாரா என்ற கேள்விக்கு ’ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம் (we should expect many surprises) என்று ஹெட்லி கூறுவார் என வில்லியம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Blog Archive