Thursday, May 27, 2010

உடனடியாக தூக்கிலிடுங்கள் என்று அஃப்சல் குரு கோரவில்லை

புதுடெல்லி:தன்னை நீண்ட நாட்கள் சிறையிலடைத்திருப்பதை விட, முடிந்தவரை விரைவில் தூக்கிலிடவேண்டுமென்று பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு சுப்ரீம் கோர்ட்டில் கோரியுள்ளார்; என்ற செய்தி தவறானது என அரசியல் சிறைக்கைதிகளின் விடுதலைக்கான அமைப்பான கமிட்டி வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியுள்ளது.

தனது விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டுமென்றுதான் அஃப்சல் குரு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

ஆனால் உடனடியாக தன்னை தூக்கிலிடவேண்டுமென்று அஃப்சல் குரு கோரியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அஃப்சலுக்கு நீதியான விசாரணை கிடைக்கவில்லை.மேலும் அஃப்சல் குருவுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை என சுப்ரீம் கோர்ட்டே தெளிவுப்படுத்தியுள்ளது என கமிட்டி தலைவர் குருசரண் சிங், பொதுச்செயலாளர் அமீத் பட்டாச்சார்யா, செயல் தலைவர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, பொதுமக்கள் தொடர்பு செயலாளர் ரோணா வில்சன் ஆகியோர் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

http://paalaivanathoothu.blogspot.com

No comments:

Post a Comment

Blog Archive